'பிக்பாஸ்'க்குப் பின் 'இந்தியன் 2' ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் கமல்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படப்பிடிப்பு ஸ்ட்ரைக் முடிந்தவுடன் தொடங்கும் என, தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இது உண்மையா என அறிந்து கொள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தோம்.

 

இது உண்மையில்லை என்றும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்தவுடன் 'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

'கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்'... கமல்ஹாசன் காட்டம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க முடியாது என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும் என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்,'' என தெரிவித்துள்ளார்.

 

Indian 2 shooting to start in the month of August tamil cinema news

People looking for online information on Indian 2, Kamal Haasan, Shankar will find this news story useful.