பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ரஷீத் கான் (கேஆர்கே) தனது உடல்நிலை குறித்து வெளியிட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தனது உடல்நிலை குறித்து கேஆர்கே, "எனக்கு வயிற்றில் புற்றுநோய். இன்னும் 1-2 ஆண்டுகள் தான் உயிருடன் இருப்பேன். எனக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை. என்மீது இரக்கம் காட்டும் யாருடைய போன் காலையும் நான் எடுக்க மாட்டேன்.
முன்பு போலவே என்னை வெறுக்கும், விரும்பும் நபர்களை நான் பாராட்டுவேன்.எனது 2 ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான் எனக்கு. ஏ கிரேடு படமொன்றைத் தயாரிக்க வேண்டும்.
அமிதாப்பச்சனை வைத்து படமொன்றை இயக்க வேண்டும் இல்லை அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும். இந்த இரண்டு ஆசைகளும் என்னுடன் சேர்ந்து இறந்து விடுமோ என்று கவலையாக இருக்கிறது,'' இவ்வாறு மிகவும் உருக்கமாக கேஆர்கே பதிவிட்டுள்ளார்.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேஆர்கே ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.