நடிகர் விக்ரம் மகன் துருவ் தனது அறிமுகப்படமான வர்மாவில் தற்போது நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மாவில் துருவ்வின் ஜோடி யார்? என்பது இதுவரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.
இந்த நிலையில் சமீபகாலமாக துருவ்வின் ஜோடியாக நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகை கவுதமி இதனை மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது மகள் நடிக்கப்போவதாக வரும் செய்திகளைப் பார்த்தேன். சுப்புலட்சுமி தற்போது படிப்பதில் பிசியாக உள்ளார். இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. அனைவரின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி,'' என, அவரது மகளின் நடிப்பு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Taken aback to see news about my daughter's acting debut. Subhalaxmi is committed to her studies and has no plans for acting now. Thank you all for your blessings on her.
— Gautami (@gautamitads) March 13, 2018