‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தில் முக்கிய அரசியல் பிரபலத்தின் மகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், அரசியல் தலைவருமான கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் ஏற்கனவே, ‘நெடுஞ்சாலை’, ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கென் கருணாஸ் ‘அசுரன்’ படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையப்படுத்தி உருவாகவிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.