பாலிவுட் நடிகர் இம்ரான்கான் ஹாஸ்மி நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் படம் வொய் சீட் இந்தியா.
இந்த படத்துக்கு முதலில் சீட் இந்தியா என்றே டைட்டில் வைக்கப்பட்டது. பின்னர் தனிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த படத்துக்கு வொய் சீட் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இம்ரான் ஏன்னு கேட்காதீங்க.. ஏன்னா இது ஏன் என்று நக்கலாக பதிலளித்துள்ளார்.
இந்த படத்தை சௌமிக் சென் இயக்கியுள்ளார். மேலும் இம்ரான் கான் ஹாஸ்மி பிலிம்ஸ் மற்றும் டி- சீரிஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
Don't ask WHY! But it's WHY! #WhyCheatIndia pic.twitter.com/wrjNnTvSf2
— WHYemraan hashmi (@emraanhashmi) January 10, 2019