ராம்சரண்-சமந்தா நடிப்பில் வெளியான 'ரங்கஸ்தலம்' படத்துக்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையொட்டி நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் சாட் செய்தார்.
அதில் தனக்கு பிடித்த நடிகை சாய் பல்லவி என்றும், தனது வாழ்வின் மறக்க முடியாத நாள் தனது 'திருமண நாள்' தான் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்மர் வெகேஷனுக்காக, கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா அமெரிக்காவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.