விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து நல்ல ஹிட் பாடல்களை கொடுத்து வந்தாலும் படங்கள் வெற்றியைடயாததால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.
பின்னர் பிரபு சாலமன் இயக்கிய மைனா நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து வந்த கும்கி உள்ளிட்ட படங்கள் வெற்றியைடைந்து இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இவரை நட்சத்திர இசையமைப்பாளராக்கியது. கிராமத்து படங்கள் என்றாலே கூப்டுடா இமானை என்ற அளவுக்கு பெயரெடுத்திருந்தார்.
மறுபுறம் ரோமியோ ஜூலியட் , டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலம் அனைத்து வித படங்களுக்கும் இசையமைப்பாளராக முடியும் என்பதை நிரூபித்தார் அவர்.
இந்நிலையில் அவர் தற்போது டோரொன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக அவர் இசையமைத்த தமிழ் குறித்த பாடலுக்கு அவருக்கு இசையமைத்திருந்தார்.
இந்த பாடலுக்காக அவரை கனடா நாட்டில் உள்ள தமிழ் காங்கரஸ் அவரை கௌரவித்துள்ளது. இதற்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்த டி.இமான் வாழ்க தமிழ் என்று பதிவிட்டுள்ளார்.
Honoured to compose a Tamil anthem for Tamil Chair,University of Toronto!Thanks to Canadian Tamil Congress for honouring me with Leaders for Change Award! Glory to God!I ensure my support always in introducing talented musicians across the globe in future too! வாழ்க தமிழ்! pic.twitter.com/i1eNhjhYof
— D.IMMAN (@immancomposer) January 20, 2019