நேற்று நடைபெற்ற டி20 முத்தரப்பு போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்த வெற்றிக்குப்பின், இந்திய ரசிகர்கள் பலரும் இலங்கை ரசிகர்களுடன் இணைந்து வங்கதேசம் பாணியில் பாம்பு டான்ஸ் ஆடி வெற்றியைக் கொண்டாடினர்.
மேலும், புலியின் வாயிலிருந்து தினேஷ் கார்த்திக் வெற்றியைப் பறித்துக் கொண்டு வந்துவிட்டார் எனவும் தினேஷைப் புகழ்ந்து வருகின்றனர்.
கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் என பாரபட்சமின்றி அனைவரும் தினேஷைப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நடிகர் அமிதாப்பச்சன், தினேஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
விஷயம் இதுதான். இந்திய அணி வென்றதும் தினேஷை வாழ்த்தி ட்வீட் செய்த அமிதாப், கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்று சொல்வதற்குப் பதிலாக 24 ரன்கள் என்று மாற்றி சொல்லி விட்டார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ட்வீட்டில் ரன்களை சரியாக சொல்லிய அமிதாப், தினேஷிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
T 2747 - that should read 34 needed in 2 overs .. NOT 24 .. apologies to Dinesh Kartik .. pic.twitter.com/yH6rVjWzpk
— Amitabh Bachchan (@SrBachchan) March 18, 2018