அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் மஹத்.
சிம்புவுடன் நெருங்கிய நடப்பில் இருந்துவரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழ் பெற்றார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் கவிஞர் வாலி எழுதிய தமிழன்டா என்ற பாடலில் இந்த வரி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. போஸ்டரில் சிம்பு வின் கட்அவுட் இருக்கிறது. மேலும் மஹத்தின் கையில் எஸ்டிஆர் என்ற டேட்டூ இடம்பெற்றிருக்கிறது. இதனை வைத்து பார்க்கும் போது படத்தில் அவர் சிம்புவின் ரசிகராக வருகிறார் என்பதை எதிர்பார்க்கலாம்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். தரண்குமார் இசையமைக்க புதுமுக இயக்குநர் பிரபு ராம் சி இயக்குகிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானவுடன் இயக்குநர் வெங்கட் பிரபு , மஹத் மற்றும் தரண்குமார் ஆகியோருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
My first Tamil solo 🎥 movie! Need all you support and love 🤗❤️ #kettavanupereduthanallavanda 👍🏻 pic.twitter.com/QJFTnfQ5mG
— Mahat Raghavendra (@MahatOfficial) January 13, 2019