இமைக்கா நொடிகள் படத்துக்கு பிறகு அதர்வா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பூம்பராங். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ் , இந்துஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த படம் வருகிற மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார். பிரசன்ன குமாரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடிகர் அதர்வா Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என தொகுப்பாளர் அக்னி கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த அதர்வா, எனக்கு பிடித்த நடிகர் விஜய்சேதுபதி. காரணம் அவர் ஒவ்வொரு படத்திலயும் அவர் வித்தியாசமான கேரக்டர் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவருக்காக ஒவ்வொரு சீனையும் மாத்திக்குவாரு. அதனால அவர் சிறந்த நடிகர்களில் ஒருவர். என்றார்.