ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆர்யாவின் எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்நடத்தப்படுகின்றன. இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது.

 

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களை தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்தின் படி பாலியல் சமத்துவம் மீறலாகும். பெண்களை காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர்.

 

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெண்கள் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியை தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும்.

 

எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன், சேனல் தலைமைச் செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

 

இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

JUST IN: 'MAPILLAI' ARYA NOT ALLOWED TO GO TO CONTESTANT'S HOUSE!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

Actor Arya is one of the most sought-after bachelors in Kollywood now - women participants are literally vying to win him over in the new reality show dedicated to finding his mate, Enga Veetu Mapillai.

Our sources inform us that the crew along with Arya recently went to Kumbakonam to visit the home of one of the participants as part of a segment in the show. However, things turned sour when they were not allowed to, due to protests by women's group activists. Arya and the crew are said to have left the spot and returned to Chennai.

Arya's Enga Veetu Mapillai program banned from high court? tamil cinema news

People looking for online information on Arya, Enga Veetu Mapillai will find this news story useful.