கலர்ஸ் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ஆர்யாவை மணமுடிக்கும் கனவுடன் உள்ளே வந்த 16 பெண்களில், தற்போது 5 பெண்களே போட்டியில் உள்ளனர். இதனால் ஆர்யாவை மணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண் யார்? என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஆர்யா போட்டியாளர்களின் வீடுகளுக்கு 'விசிட்' அடித்து வருகிறார். அந்த வகையில் முதலில் கும்பகோணத்தில் உள்ள அபர்நதியின் வீட்டுக்கு சமீபத்தில் சென்றார்.
அங்கு அபர்நதியின் அம்மா மற்றும் மாமா ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அபர்நதி வீட்டில் கலந்துரையாடிய ஆர்யா அவருடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றார்.
இதுகுறித்து ஆர்யா, "இதுவரை படப்பிடிப்புகளுக்காக மட்டுமே கோயில்களுக்கு சென்றுள்ளேன். ஒரு பெண்ணுடன் கோயிலுக்கு வருவது இதுதான் முதல்முறை,'' என்றார்.
அபர்நதியின் எமோஷனல் பேச்சைக் காண கீழே உள்ள 'வீடியோ' லிங்கைக் 'கிளிக்' செய்யவும்...