அப்போ கிரிக்கெட், இப்போ மல்யுத்தம்- விளையாட்டில் அசத்தும் வடசென்னை நாயகி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

Aishwarya Rajesh playing a wrestler in an upcoming telugu flick

இந்த திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மல்யுத்த வீராங்கனையாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  ‘சலீம்’,‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படங்களை இயக்கிய நிர்மல் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்குகிறார்.

உதய் ஷங்கர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh playing a wrestler in an upcoming telugu flick

People looking for online information on Aishwarya Rajesh, Cricket, Kanaa, Vijay Deverakonda, Wrestler will find this news story useful.