‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ‘ஜாங்கிரி’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மதுமிதா.
கலகலப்பான டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை ஈர்த்த மதுமிதா, தனது உறவினரும், உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயல் என்பவரை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களது திருமணம் கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. திருமண மண்டபத்தில், காலை 7.30 மணியளவில் நடைபெற்றது. மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன் அதிமுக-வின் பேச்சாளர் என்பதால், அதிமுக அமைச்சர்கள் உட்பட சில அரசியல் பிரமுகர்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
மேலும், மதுமிதாவின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.