2019ம் ஆண்டு ப்ளஸ்டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த, ஏழை, எளிய மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் அறிவிப்பில், அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் கடந்த 10 ஆண்டுகளாக துணைபுரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு அகரம் முன்னுரிமை வழங்குகிறது.
இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்திற்கு தொடர்புக் கொள்ள செய்யும்படி, வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் குறிப்பிட்ட தொடர்வு எண்களை எழுதிப் போடும்படி ஆசிரியர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் !! #அகரம் #Agaramfoundation #Govtschool pic.twitter.com/dJbIohZ9uZ
— Suriya Sivakumar (@Suriya_offl) February 12, 2019