'மதயானைக்கூட்டம்', 'விக்ரம் வேதா' புகழ் நடிகர் கதிர்-சஞ்சனா திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4.3.18) ஈரோட்டில் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் 'புது மாப்பிள்ளை' கதிர் அனைவருக்கும் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "உங்கள் அனைவரின் வாழ்த்து மற்றும் ஆசீர்வாதங்களைப் பார்த்து உருகிப்போனேன். அனைவருக்கும் நன்றி,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கதிர் நடிப்பில் அடுத்ததாக, 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thank u all so much for bringing warmth to our lives & happiness to our hearts❤️🙏🏻 Felt blessed seeing all ur Wishes & Blessing for us!! Means a lot to us!! #NoMoreSingle😭 🤣 pic.twitter.com/jt3UTGFyu0
— kathir (@am_kathir) March 9, 2018