அன்னைக்கு ஆபீஸ் பரபரப்பா இருந்துச்சு... மச்சா அந்த கொஸ்டின் கேளு இந்த பாட்ட பத்தி கேளுன்னு எல்லாரும் ஆளுக்கு ஆளுக்கு ஒவ்வொன்னு சொல்லிட்டு இருந்தோம்... எல்லாருக்கும் யுவன் கிட்ட கேக்க, சொல்ல ஏதோ ஒன்னு இருந்துச்சு.... இன்டெர்வியூ பண்ண போன anchor-ட கண்டிப்பா இது ஒரு Incomplete Conversation ah தா இருக்கும்னு சொன்னேன்...
யுவன் எனக்கு அம்மா மாதிரி... இந்த Romanticise பண்ற அம்மா கெடயாது ரியாலிட்டி அம்மா.... டெய்லி அம்மாவ நாம கண்டுக்கவே மாட்டோம் ஆனா நம்ம கொஞ்சம் insecured ah உணர்ந்தா கூட அம்மா நெனப்பு வந்துரும்... அந்த மாதிரி... மெனக்கெட்டு வர்ர எல்லா புது யுவன் பாட்டு கேக்கணும்லா இருந்ததே கெடயாது... நல்ல பாட்டு காதல் மாதிரி அது நம்மள தானா வந்து சேரும்னா வந்து சேரும் நம்புறவ நான்.. ஆனா கொஞ்சம் உள்ள ஒடஞ்சு போனாலும் ஓடி போறது யுவன் கிட்ட தான்...
வாழ்க்கையே முடியப்போகுதுனு இருந்தப்போ கேட்ட ஒரு நாளில் வாழ்க்கை பாட்டு... எப்போ தனியா உணர்ந்தாலும் உனக்காக தானே இந்த உயிர் உள்ளது பாட்டோ... என்ன வேணாம்ணு சொன்னவன நெனச்சு கோவமா கேட்ட உன்னை உன்னை தவிர வேறெதுவுமில்லை பாட்டோ... யுவன் என் வாழ்க்கையோட இழையோடி இருக்கான்...
HAPPY BIRTHDAY முத்தக்காரா...!