மதன் கார்க்கி – நூற்றெண்பது (நீ கோரினால்)
தீயே இன்றியே நீ என்னை வாட்டினாய் (Microwave Oven – Watch the video song to know why he has used this comparison)
விக்னேஷ் ஷிவன் – நானும் ரௌடிதான் (கண்ணான கண்ணே)
கடல் அல போல உன் கால் தொட்டு உரசி
கடலுள்ள போறவன் நானில்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி!
விவேக் வேல்முருகன் – இறைவி (மனிதி)
ஐந்து வயது பிஞ்சுப் பெண்ணை
நசுக்கும் காமுகன் இங்குண்டு
அரை குறை ஆடை காரணமா
அந்த சிசுவையும் சேலையில் மூடணுமா!
******
கண்ணதாசன்கிட்ட போய் நீங்க ஏன் Child Abuse பத்தி எழுதலன்னு கேட்கறது நியாயமில்ல. ஏன்னா, அவர் காலத்துல அது நடக்கல, நடந்தாலும் பேசப் படல, அதனால எழுதப்படல. அதே மாதிரிதான், ஏன் இப்போலாம் பாடல்கள்ல கருத்துகள் கம்மி ஆகிடுச்சுன்னா ஏற்கனவே எழுத்திட்டாங்க கண்ணதாசன் மாதிரி பாடலாசிரியர்கள். (கருத்துகள் இல்லன்னு சொல்லல, கம்மியாகிடுச்சு!)
‘’ஊமையின் கனவை யாரறிவார்’’ - கண்ணதாசன் (ராமு – நிலவே என்னிடம் நெருங்காதே)
‘’ரப்பர் வளவிக்குத்தான் சத்தமிட வாயில்லையே’’ வைரமுத்து (கடல் – நெஞ்சுக்குள்ள)
‘’ஓசையே காணலாய் மாற’’ முத்தமிழ் (வாயை மூடி பேசவும் – காதல் அர ஒன்னு விழுந்துச்சு)
இப்போ என்ன சொன்னா, எப்படி சொன்னா, மக்கள போய் சேருமோ அப்படித்தான் சொல்லணும். அப்படித்தான் இது வரைக்கும் உலகம் இயங்கியிருக்கு, அந்தந்த காலத்துக்கு ஏத்த மாதிரி. இனிமேலும் அப்படித்தான் இயங்கும்.
நாம...
'அந்த காலத்துல நாங்கெல்லாம் தம்பி...!' அப்படின்னு பேசியே பழகிட்டோம் கொஞ்ச காலமாவே. அதனாலதானோ என்னவோ முன்னாடியிருந்தவங்களையே புகழ்ந்து, இப்போ கண்ணு முன்னால இருக்கிறவங்கள கண்டுக்க மாட்டேன்கிறோம்.
இப்படி கண்டுக்காமலேயே பொத்தாம் பொதுவா, இப்போலாம் நல்ல பாட்டே வர்றதில்லன்னு சொல்றத ஏத்துக்க முடியாது. அது உண்மையும் இல்ல!
இனிமே யாராவது அப்படி சொன்னா... இல்ல, உங்களுக்கே அப்படியொரு எண்ணம் இருந்தா அப்படியே மேல ஸ்குரோல்பண்ணி டைட்டில ஒரு முறை படிச்சிக்கோங்க.
அவசியம் படிக்கவும் -
கண்ணதாசன், கார்க்கி என்ற பெயர்கள் இங்கு அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தையே குறிக்கிறது. நானும் கண்ணதாசன் பாடல்கள் கேட்டு மிரண்டவன்தான். கார்க்கியின் பாடல்கள் கேட்டு மகிழ்பவன்தான்.