கார்க்கியை புகழ பயமாய் இருக்கிறது!!
போகன் திரைப்படத்தின் 'கூடு விட்டு கூடு' என்ற இந்தப் பாடல்,
வறுமை கண்டு அஞ்சாதவனை,
வாழ்வை வளைக்க அஞ்சாதவனை,
ஆசை, பணம், பொருள், இச்சை, மோகம் என்னும் ஆசா பாசங்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பவனை -அத்தனைக்கும் ஆசைப்படும் - போகனை பாடும் பாடல்!
கேட்கும் போதே 'யார் எழுதியிருப்பா?' என்னும் கேள்வியெழுப்பி, அதை நாம் கண்டறியும் பொழுது 'நெனச்சேன்! இந்த மனுசனாத்தான் இருக்கணும்!!' என்று சந்தோஷப்பட வைக்கிறது இந்தப் பாடல் வரிகள்!
Just Karky Things -
அணியும் நாற்றம் கொண்டே
அவளின் பெயரைச் சொல்பவன் போகன்!
***
காமம் Loaded Gun!
முத்தம் துப்பும் Dragon!
***
வாங்கும் பொருளின்
விலை பட்டை
திருப்பிப் பார்ப்பவன் மூடன்,
கண்ணில் காணும்
பொருள் எல்லாம்
தனதே என்பான் போகன்!
***
இவன் மனவெளி ரகசியம்
அதை நாசா பேசாதோ!?
***
கருங்குழி உள்ளே சென்று
திரும்பிடுவானே!
***
இதையெல்லாம் விடவும், நொடியில் என்னை அசத்தி இதனை
எழுதச்செய்த வரி...
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா!
- - - - -
அணியும் நாற்றம் - Perfume
விலை பட்டை - Rate Card
கருங்குழி - Black Hole
போகன் வில்லா (Bougainvillea) - Bougainvillea is an immensely showy, floriferous and hardy plant. Try google image search to know the awesomeness of Karky!
போகன் -
அவன் காமக் கணக்கில்
குழப்பங்கள் இல்லை.
அவன் காதல் பொழுதில்
விடியல்கள் இல்லை.
அவன் கட்டில் கடலில் சீற்றமுண்டு வருத்தங்கள் இல்லை.
அவன் ஆசை திமிரில் தீர்க்கமுண்டு
திருத்தங்கள் இல்லை!
இப்படியொருவனுக்கான அறிமுகப் பாடலை இதைவிட தெளிவாக,
அறிவுப்பூர்வமாக எழுத முடியுமா என்ற கேள்வியெழும் அளவிற்கு எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.
இப்படியொரு பாடல் எவர் வேண்டுமானாலும் எழுதலாம். இருந்தும் கார்க்கி தன் கையெழுத்தை, முத்திரையை வரிக்கு வரி பதித்திருக்கிறார்.
இனியொருவன் இப்படியொரு பாடலை எழுத நினைக்கும்பொழுது, ரொம்பவும் கஷ்டப்படும் அளவிற்கு பதித்திருக்கிறார்!
Hot is the word. This song is Hot! TOO HOT!
கார்க்கியை புகழ பயமாய் இருக்கிறது. இப்போதே தெரிந்த புகழ் வார்த்தைகளை பயன்படுத்திவிட்டால், அடுத்த முறை எதைச் சொல்லி புகழ்வதென்ற பயம்!