சென்னை, 25 ஜூலை 2022: ஜீ தமிழ் சேனல், சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், தமிழா தமிழா, சூப்பர் குயின் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் போட்டியாளர்களின் திறமையை வெளிப்படுத்த பொருத்தமான தளங்களை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. சாமானிய மக்களில் இருந்து 12 பேர் பல்வேறு சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 12 சின்னத்திரை/திரையுலக பிரபலங்களுடன் அவர்கள் இணைந்து நடனமாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடும் போட்டியாளர்களின் திறமையை மதிப்பிட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சினேகா, சங்கீதா, ஓவியா மற்றும் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க ஆர்.ஜே.விஜய் மற்றும் கிகி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர்.
கிளாசிக்கல், ஹிப்-ஹாப், ஃப்ரீஸ்டைல் முதல் நாட்டுப்புற நடனம் என ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ரவுண்டுகளின் மூலம் போட்டியாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். கடந்த சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்ற ரேஷ்மா, கதிர், யோகேஸ்வரன், அர்ச்சனா, அஷ்வினி, ஜீவன், காளி உள்ளிட்ட பல சிறந்த போட்டியாளர்கள் சின்னத்திரையில் இன்று ஸ்டாராக ஜொலித்து வருகின்றனர்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களை போலவே நான்காவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 30 முதல் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் இரவு 8 மணிக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.