www.garudavega.com

மஜா பா.. மஜா பா.. யுவனின் மாஸ் எண்ட்ரி.. சிவனின் ராப் வரிகள்.. 'உண்மையிலயே டாப் டக்கர் தான்!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

YRF தயாரிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில், யுவன், உச்சன அமித், பாட்ஷா, ஜொனிதா காந்தி குரலில் உருவாகியிருக்கும் "Top Tucker" ஆல்பம் பாடலின் டீசர் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

Yuvan Shankar Raja Top Tucker Rashmika Trending டாப் டக்கர்

யுவன் ஷங்கர் ராஜாவின் புதிய வித்தியாசமான முயற்சியில் உருவான இந்த பாடலின் டீசரிலேயே ரஷ்மிகா மந்தனாவின் தோற்றம் பலரையும் கவர்ந்தது.  அமர்ப்ரீத் ஜிஎஸ் சாப்ரா இயக்கத்தில் இந்த பாடலின் படப்பிடிப்பு தளத்தில் யுவன் சங்கர் ராஜாவும் ரஷ்மிகாவும் டான்ஸ் ஆடும் ஸ்டில்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆகின.

இந்நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தி, ஆங்கிலம், தமிழ் என கலந்து பஞ்சாபி ஸ்டைலில் உருவாக்கியிருக்கும் ஜனரஞ்சகமான இந்த பாடலில் தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

மாமா, மச்சான், குட்டி என ஆங்காங்கே வரும் தமிழ் வார்த்தைகளைத் தொடர்ந்து பாடல் பயணிக்கிறது.

பாதி பாடலுக்கு மேல் மாஸாக எண்ட்ரி கொடுக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ரஷ்மிகாவுடன் லைட்டாக ஸ்டெப்ஸை போட்டு அசத்துகிறார்.  ‘பேபி யு ஆர் மை டாப்பு டக்கரு’ என்கிற வரிகள் இந்த பாடலில் தொடர்ச்சியாக வருகின்றன. தமிழில் ‘நீதான் எந்தன் ஹாட் லவ்வரு’ என்றும் இதே வரிகள் வருகின்றன. இவை அனைத்தும் ஒரே பாடலில் கலவையாக வருவதால் இந்த பாடல் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ALSO READ: தல அஜித் Fans-க்கு அடுத்த ட்ரீட்.. வலிமை ஓபனிங் பாடல் தொடர்பான வைரல் வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan Shankar Raja Top Tucker Rashmika Trending டாப் டக்கர்

People looking for online information on Rashmika Mandana, Toptucker, Vignesh shivan, Yuvan Shankar Raja will find this news story useful.