தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரனுக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய 16 ஆவது வயதில் அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது அஜித் & முருகதாஸ் கூட்டணியில் உருவான ’தீனா’ திரைப்படம்.
அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள யுவன் ஷங்கர் ராஜா இதுவரை 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு இசையமைப்பாளரான அறிமுகம் ஆன யுவன், இந்த 25 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதுபோல செல்வராகவன், வெங்கட்பிரபு, அமீர், ஏ ஆர் முருகதாஸ், ராம், ஹரி என முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை 150+ படங்களில் பணியாற்றியுள்ள யுவன், ரசிகர்களைக் கவர்ந்த பல பாடல்களைக் கொடுத்துள்ளார்.
யுவன் தனது இசையில் மெலடி, சோகப்பாடல்கள், குத்துப்பாடல்கள் என எல்லா வகையிலும் ஹிட்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக யுவனின் பின்னணி இசையமைப்புகளும் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தவை.
இந்நிலையில் தனது தம்பியும் சித்தப்பா மகனுமான பிரேம்ஜி அமரனுக்கு பரிசாக புதிய ஆப்பிள் ஐபோன் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜிக்கு பரிசளிக்கும் போது வெங்கட் பிரபு சோகமான ரியாக்ஷன் கொடுப்பது போல் புகைப்படம் அமைந்துள்ளது.