இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைப்புயலின் மகனும் பாகடருமான AR அமீனும் இணைந்து பாடிய நபிகளை போற்றும் “TALA AL BADRU ALAYNA” எனும் தனிப்பாடல் இன்று வெளியாகியுள்ளது.
முகமது நபிகளை (Pbuh), புகழும் இந்த புதிய தனி பாடல் ரசிகர்களுக்காக 2021 மே 14 -ஆம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது. “TALA AL BADRU ALAYNA” எனும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை (Pbuh), போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டது என்றும், மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல்தான் இது என்றும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த கவிதை பாடல் பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவானது என்றும், உலகம் முழுக்கவே மிகவும் புகழ் பெற்றது என்றும் குறிப்பிடப் படுகிறது.
இப்பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறுகையில், “இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். TALA AL BADRU ALAYNA போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த பெரும் பெருமை. அத்துடன் எனது சகோதரர் AR அமீனுடன் இப்படியான ஆன்மீக பாடலை இணைந்து பாடியதில் பெருமகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று தேரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய பாடகர் AR ரஹ்மானின் மகனும் பாடகருமான அமீன், “நபிகளை (Pbuh), போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதியையும் அருளட்டும்” என்றார்.
A Sweet Eid Surprise from ‘U1 RECORDS’,
Presenting ‘Tala'a Al-Badru 'Alayna‘ https://t.co/quWHaCQtcI
The Little Maestro @thisisysr & The Little Mozart @arrameen coming together for the first time, for a blessed Song that has its roots etched in the history of Islam.#EidMubarak
— U1 Records (@U1Records) May 14, 2021
Abdul Basith Bukhari ,“Tala Al Badru Alayna” எனும் இப்பாடலின் முழு அர்த்தத்தையும் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கான இசை வடிவத்தை, வடிவமைத்து உருவாக்கியுள்ளார். முழுமையான தனி பாடலாக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், தேவையுள்ள ஏழை, எளியோர்ருக்கு அளிக்கப்படவுள்ளது.