நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும், கதாநாயகனாக நடித்துள்ள சிம்பு, 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று (02.09.2022) நடைபெற்றது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடந்த நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பேசி இருந்த பல சுவாரஸ்யமான விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சில அசத்தலான தகவலைகளை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டார்.
சிம்புவின் அனேகமான பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. சிம்புவின் குரலிலும் யுவன் சங்கர் ராஜா பல பாடல்களை உருவாக்கி இருக்கிறார். சிம்பு படங்களுக்காக யுவன் சங்கர் ராஜா தன் சொந்த குரலில் பாடிய பல பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில் வெந்து அணிந்தது காடு திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரைலர் விழாவில் கலந்துகொண்ட யுவன் சங்கர் ராஜா சிம்பு குறித்தும், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்தும் பேசி இருக்கிறார். அதில், "எப்போதும் ஏ ஆர் ரஹ்மான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கிறார். இன்னும் இன்ஸ்பிரேஷன் செய்து கொண்டே இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சிம்பு குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா, "அவர் எப்போதுமே மனசில் ஈரம் உள்ள ஒரு நபர். புகழ் எல்லாம் சின்ன வயதிலேயே அவர் பார்த்து விட்டார். வளரும் பொழுதே எல்லாவற்றையும் பார்த்து வளர்ந்த ஒருவர் அவர்" என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிப்புக்கு என்ன பாடலை டெடிகேட் பண்ணுவீர்கள் என்று கேட்டதற்கு நலம் தானா நலம் தானா என்கிற பாடலை சிம்புக்கு டெடிகேட் பண்ணுவதாக குறிப்பிட்டார். சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.