டென்மார்க்கைச் சேர்ந்த ஆல்பர்ட் டைர்லண்ட் என்கிற பிரபல யூ டியூபர் இத்தாலியில் உள்ள மலைத்தொடரில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பர்ட் டைர்லண்ட் (Albert Dyrlund), டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் ஆவார். இவர் மியூசிக் மற்றும் காமெடி ஸ்கெட்சஸ் வீடியோக்களை தொடர்ச்சியாக தமது யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வந்தார். குறிப்பாக ஆல்பர்ட் தயாரித்து வெளியிட்டுள்ள “Emoji”, “Ula” மற்றும் “Summer” ஆகிய பாடல்கள் அவரது ரசிகர்களிடையே பிரபலம்.
இவருக்கு சுமார் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருந்த நிலையில், இத்தாலியின் வால்கார்டெனா பகுதி, செசெடா மலைத் தொடரில் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த போதுதான் இந்த துர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்தை இத்தாலி செய்தி நிறுவனமான ராய் நியூஸ் உறுதி செய்ததுடன், மீட்புப் பணிக்காக வீரர்கள் அனுப்பப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவித்துள்ளது.
ஆல்பர்ட் டைர்லண்ட்டின் இறப்பை அவரது தாயார் விபி ஜார்கர் ஜென்சன்(vibe Jørger Jensen) உறுதி செய்துள்ளார். குறிப்பாக ஆல்பர்ட்டின் காதலி மரியா ஆண்டர்சன், தானும் ஆல்பர்ட்டும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவரது மரண செய்தி தன் இதயத்தை நொறுங்கடித்ததாக தெரிவித்துள்ளார்.
தன் இதயத்துடிப்புடன் ஒட்டி இருக்கும் ஆல்பர்ட்டுக்கு தினமும் இரவு தூங்கச் செல்லும்போது தான், ‘I Love You’ கூறுவதாகவும், ஆல்பர்ட் நிச்சயம் அதனை கேட்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ALSO READ: Yo Yo Honey Singh.."சைக்கோ.. குடும்ப வன்முறை.. பல பெண்களுடன் தொடர்பு".. மனைவி புகார்!