பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
1970களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் எனும் கதாபாத்திரமாக குத்துச்சண்டையில் கலந்துகொண்டு சண்டையிடுவார். இந்த சண்டையின் இறுதியில், ‘ரங்கன் வாத்தியார்’ பசுபதியின் ஆசியோடு சார்பட்டா பரம்பரையை ஆர்யா ஜெயிக்க வைக்கிறாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
இதில் ஜெயிப்பதற்கு ஆர்யா, வேம்புலி எனும் ஒரு கேரக்டரை எதிர்கொள்ள வேண்டும். அதற்கும் முன்பாக டான்சிங் ரோஸ் என்கிற இன்னொரு கேரக்டரை எதிர் கொள்வார். அந்த டான்ஸிங் ரோஸ் குத்துச்சண்டை போட்டியின் போது கூட, ரிங்குக்குள் டான்ஸ் ஆடிக் கொண்டே எதிராளியின் கவனத்தை திசை திருப்புவது, தன்னம்பிக்கையை குறைப்பது போன்ற விஷயங்களை செய்வார்.
இந்த கேரக்டரில் ஷபீர் கல்லரக்கல் நடித்திருந்தார். மிகவும் அசத்தலான தனது நடிப்பை இந்த கேரக்டரில் அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதற்கென ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் பல பாராட்டுகளை பெற்று வருகிறார். நிஜ வாழ்க்கை வீரர்களின் தத்ரூபமான நுணுக்கங்களோடு டான்சிங் ரோஸ் என்கிற கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஷபீர்.
இந்த நிலையில் தான், டான்ஸிங் ரோஸ் கேரக்டர், டாடி எனும் கேரக்டராக வரும் ஜான் விஜய் கேரக்டர், கபிலன் கேரக்டராக வரும் ஆர்யா உள்ளிட்ட பலரையும் இமிடேட் செய்து அவர்களைப் போலவே நடை, உடை, பாவனைகளுடன் நடித்து வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் விஸ்வாமித்ரன் எனும் இளைஞர்.
தொடர்ந்து பல்வேறு விதமான நடிப்புத் திறமையை தம்முடைய வலைப்பக்கத்தில் வீடியோவாகவும், இன்ஸ்டா ரீல்ஸாகவும் வெளியிட்டு வந்த விஸ்வா மித்ரன், தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களையும் இமிடேட் செய்துள்ளார்.
இதில் இந்த வீடியோவை பார்த்த ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினரில், வேம்புலி எனும் கேரக்டராக வரும் ஜான் கொக்கேன் (John Kokken) விஸ்வா மித்ரனை வெகுவாக பாராட்டி இருக்கிறார். தவிர, படக்குழுவினர் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். இதனால் ஒரே நாளில் விஸ்வா மித்ரன் வைரல் ஆகி இருக்கிறார். எனினும் இது இவரது தொடர்ச்சியான உழைப்புக்கு கிடைத்த ஒரு அட்டென்ஷன் இது எனலாம்.