இளம் மாடல் நடிகை ஹோட்டல் அறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... திருப்பதியில் தரிசனம் .. பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாடல் நடிகை அகான்ஷா மோகன். பொறியியல் & எம். பி. ஏ பட்டதாரியான இவர் சில படங்களில் நடித்து உள்ளார். கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
கடந்த மாதம் பாலிவுட்டில் வெளியான சியா என்ற படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் 9 திருடர்கள் என்ற படத்திலும் ஹீரோயினாக அகான்ஷா நடித்துள்ளார்.
நடிகை அகான்ஷா மோகன், மும்பையில் உள்ள வெர்சோவா ஏரியாவில் அமைந்துள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 2 நாட்களாக தங்கி இருந்தார் என கூறப்படுகிறது. இரவு எட்டு மணிக்கு அகான்ஷா இரவு உணவை ஆர்டர் செய்ததாகவும், மறுநாள் காலை ஹோட்டல் அறை திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த பணியாளர் தகவலை ஹோட்டல் மேலாளரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அறையை திறந்து பார்த்த போது நடிகை அகான்ஷா மோகன், உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார் என கூறப்படுகிறது.
நடிகையின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில், 'மன்னிக்கவும், நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை.,எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மரணம் குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Also Read | அட.. பிரபல தமிழ்நாட்டு கோயிலில் பொன்னியின் செல்வன் 'பூங்குழலி' சாமி தரிசனம்.!