சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்தனர்.
இனி இந்நிலையில் அவரது உடல் மும்பையின் வைல் பார்லே என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் பங்குகொண்டனர். ஸ்ரெத்தா கபூர், கிரிதி சானுன், ராஜ்குமார் ராவ், விவேக் ஓபராய், ஏக்தா கபூர், வருண் சர்மா, ரன்வீர் ஷெராய், ரியா சக்கரவர்த்தி போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் ஆன்மா சாந்தி அடையட்டும். RIP.
மன அழுத்தம் எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.