சமீப காலமாகவே இந்திய சினிமா உலகில் பல துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் அடுத்தடுத்த மரணிக்கும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அப்படி ஒரு செய்தி தற்போது திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தற்போது மரணமடைந்துள்ளார். இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை மேகனா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனதை உடைக்கும் அவரது இறுதி ஊர்வல காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.