தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ்.
Also Read | VIDEO: தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்.. வெளியான தெறி மாஸ் அப்டேட்!
தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் துவங்கி உள்ளது.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் நடிகர் விதார்த் மற்றும் யோகி பாபு நடிப்பில் புதிய படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக இயக்குனர் அருண் செழியன் இயக்கும் இந்த படத்திற்கு 'குடியிருந்த கோயில்' என பெயரிடப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியிருந்த கோயில் திரைப்படம் 1968 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Also Read | திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் எழுதிய "மயக்கமா கலக்கமா" பாடல்.. வெளியான செம LYRIC VIDEO!