Godavari News Banner USA

‘இந்தியாவுக்கு ஒரு அவமானம்னு நான் வந்தேன்.. ஏன்னா..’- நாக்-அவுட் செய்த யோகிபாபு வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘கூர்கா’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

Yogibabu starring Gurkha sneak peek video is released

‘டார்லிங்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாம் ஆண்டன் இயக்கயுள்ள திரைப்படம் ‘கூர்கா’. இப்படத்தில் யோகிபாபு, சார்லி, கனடா மாடல் எலிஸா, ஆனந்தராஜ், மனோபாலா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரரை நாக்-அவுட் செய்து அசத்தும் யோகிபாபு, ‘இந்தியாவுக்கு ஒரு அவமானம்னு நான் வந்தேன். ஏன்னா.. இந்தியா என் தாய் வீடு, ஆனா அமெரிக்காவும் ஜெயிக்கணும், ஏன்னா அமெரிக்கா என் மாமியார் வீடு’ என வசனம் பேசியுள்ளார்.

காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கூர்கா’ திரைப்படம் வரும் ஜூலை.12ம் தேதி ரிலீசாகவுள்ளது.

‘இந்தியாவுக்கு ஒரு அவமானம்னு நான் வந்தேன்.. ஏன்னா..’- நாக்-அவுட் செய்த யோகிபாபு வீடியோ! வீடியோ

Yogibabu starring Gurkha sneak peek video is released

People looking for online information on Gurkha, Sam Anton, Yogi Babu will find this news story useful.