Godavari News Banner USA

''இந்த விஷயத்தை மட்டும் விஜய் செய்யத்தவறியதே இல்லை'' - முன்னாள் பிக்பாஸ் ஸ்டார் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Yashika Aannand Praised Thalapathy Vijay and Bigil

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், 'தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ''எதிர்மறையான எந்த விஷயங்களும் இல்லாத மிகச்சிறந்த மனிதர் அவர். மேலும் நேர்மறையான சிந்தனைகள் மட்டுமே உள்ளவர். மற்றவர்களின் திறமைகளையும் அறிவையும் பாராட்ட என்றுமே அவர் தவறியதில்லை. தளபதி விஜய் சார், பிகிலுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறேன்'' என்றார்.

 

Yashika Aannand Praised Thalapathy Vijay and Bigil

People looking for online information on Bigil, Thalapathy, Vijay, Yashika Aannand will find this news story useful.