பிக்பாஸ் 3 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் சேரன் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கேல்டன் டிக்கெட் பெற்றுள்ளதால் முகேனைத் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களும் நடிகர்களுமான மகத்தும் யாஷிகாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதனை விஜய் டிவி புரோமோவாக ஒளிபரப்பியது. இருவரும் போட்டியாளர்களுடன் கலந்துரையாடி, பிக்பாஸ் அறிவுருத்தலின் பேரில் அவர்களுக்கு டாஸ்க்குகள் கொடுத்தனர்.
இதுகுறித்து ட்விட் ஒன்றில் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், இறுதியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றேன். அங்கு மஹத்துடன் இணைந்து எங்கள் படமான 'இவன் தான் உத்தமன்' படத்தின் டீஸரை வெளியிட்டோம். எனக்கு விருப்பமான போட்டியாளர்களிடம் பேசியது மகிழ்ச்சி. நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். உங்களை இறுதிப் போட்டியில் காண்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Finally entering the #biggboss3 house ! And so happy to be there along with @mahatofficial in order to release our teaser of #ivandhanuthaman !! So happy to chit chat with my Favourite contestants of this season ! You all are doing a great job ! See you in finale ❤️🙌 https://t.co/PiUV4breat
— Yashika Aannand (@iamyashikaanand) September 24, 2019