ரைட்டர் படத்தின் தொலைக்காட்சி பிரீமியர் பற்றிய அப்டேட் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்….
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் மூலமாக அடுத்தடுத்து தரமான படங்களை தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் ஆகிய படங்கள் வெளியாகி பாராட்டுகளைக் குவித்துள்ளன. அடுத்து வரிசையாக சேத்துமான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளன.
ரைட்டர்…
கடந்த ஆண்டு இறுதியில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் ’ரைட்டர்’. இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். . இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வசூல் ரீதியாக்வும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.
கதைக்களம்…
இந்த படத்தில் காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். காவல்துறையிள்ள கீழ்நிலை பணியாளர் ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் படமாக ரைட்டர் அமைந்திருந்தது. படத்தின் ரிலீஸூக்குப் பிறகு ஏகோபித்த பாராட்டுகளை இந்த படம் பெற்றது.
அனுராக் காஷ்யப் பாராட்டு..
சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த பாலிவுட் இயக்குனரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தியாவின் முகமாக அறியப்படுபவருமான அனுராக் காஷ்யப் ‘ரைட்டர்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இந்த ஏற்பாட்டை இயக்குனர் வெற்றிமாறன் ஒருங்கிணைத்ததாக தெரிகிறது. படம் பார்த்த அனுராக் காஷ்யப் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியவர்களோடு படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
தொலைக்காட்சி பிரிமீயர்….
இந்த திரைப்படம் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹா தமிழில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதையடுத்து தொலைக்காட்சி பிரீமியர் பற்றிய எக்ஸைட்டிங்கான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த படம் வரும் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.