www.garudabazaar.com
www.garudavega.com

“வலிமை பாடலை கேட்டேன்!.. ‘தல’க்காக வெயிட் பண்றது வொர்த்”! - இசையமைப்பாளர் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மைக் காலமாகவே அஜித் ரசிகர்கள் பலரும் வலிமை படம் தொடர்பான அப்டேட்டுக்காக ஏங்கி வந்தனர்.

worth YSR Music Thala Valimai Thaman அஜித் வலிமை வொர்த்

ஒரு கட்டத்தில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், படத்தில் ஒரு சண்டைக் காட்சியை தவிர ஏனைய காட்சிகள் நிறைவடைந்து விட்டதாகவும் post-production பணிகள் நடக்க இருப்பதாகவும் படம் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதன் பிறகும் தொடர்ந்து ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்ததால் நேரடியாகவே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த போனி கபூர் விரைவில் படத்தின் முதல் பார்வை புகைப்படம் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டு சற்றே ரசிகர்களை சாந்தப் படுத்தினார்.

இதனிடையே பிரதமர் மோடி தொடங்கி, கிரிக்கெட் வீரர் மொயின் அலி வரை பலரிடமும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து தமது ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் இப்படி கேட்பது தம்மை வருத்தமுறச் செய்வதாகவும், பட வெளியீடு தேதி தொடர்பான முடிவுகள் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து தாம் நிர்ணயம் செய்வேன் என்றும், தமது உண்மையான ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் நடிகர் அஜித் தமது தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

worth YSR Music Thala Valimai Thaman அஜித் வலிமை வொர்த்

இதனிடையே வலிமை படத்துக்காக விக்னேஷ் சிவனுடன் அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பணிபுரிந்து கொண்டிருந்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. வலிமை படத்தின் முதல் பாடலுக்கான பணிகள் தான் அந்த வீடியோவில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த படத்தின் முதல் பாடலை விக்னேஷ் சிவன் எழுதுகிறார் என்பதால் அந்த வீடியோவை பலரும் பகிர்ந்தனர்.

இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் தமனிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். அவருக்கு ட்விட்டரில் பதிலளித்த தமன், “எனது சகோதரர் ..டார்லிங்.. யுவன் ஷங்கர் ராஜா தல அஜித்தின் வலிமை படத்திற்காக இசையமைத்திருந்த பாடல் ஒன்றை நான் கேட்டேன். கண்டிப்பாக தல அஜித்துக்காகவும் வலிமை படத்துக்காகவும் நாம் காத்திருப்பது வொர்த் தான்!” என்று பதில் அளித்துள்ளார்.

அவரது இந்த ட்வீட் தீயாய் பரவிவருகிறது.

ALSO READ: “அயலான் பாட்டு எப்படி வேணும்?”.. ரசிகர்களுக்கு ஆப்ஷன் கொடுத்து ட்வீட் போட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Worth YSR Music Thala Valimai Thaman அஜித் வலிமை வொர்த்

People looking for online information on Ajith, Kikichified, Thala, Thaman, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.