தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தல அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார்.
நேற்று அக்டோபர் 4ம் தேதி, 29 வயது நிறைவடைந்த பெண்மணி பர்ஜானா, தல அஜித்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய வீட்டு வாசலில் நின்று தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும் தல அஜித்தை நேரடியாக ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என்று முழங்கினார்.
தீக்குளிக்க முயற்சி செய்து எரிபொருளை உடலின் மீது ஊற்றிய அந்த பெண்மணியை போலீசார் தடுத்தனர். மேலும் சில குடங்களில் நீரை எடுத்து வந்து அந்தப் பெண்மணியின் மீது ஊற்றி அந்தப் பெண்மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பெண்மணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் அந்த மருத்துவமனையின் விதிகளை மீறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிகிறது. பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால், நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வருடாந்திர பொது மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.
அந்த மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிரைவசிக்காக மருத்துவமனையினுள் புகைபடமோ அல்லது வீடியோவோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி இந்த பெண்மணி அஜித்துடன் செல்பி புகைப்படமும், அஜித்- ஷாலினி மருத்துவமனையின் உள்ளே வரும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் பரவி, அஜித் ஷாலினி தம்பதியினர் கொரோணா பரிசோதனைக்காக சென்று வந்தனர் என்கிற தவறான தகவல்கள் பரவியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பெண்மணியை பணி நீக்கம் செய்தது.
பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த பெண்மணி அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி அவர்களை தொடர்பு கொண்டு, இழந்த வேலையை மீண்டும் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை ஏற்ற நடிகை ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி இந்த பெண்மணியை மீண்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்தின் விதிகளை இந்த பெண்மணி வேறொரு சம்பவத்தின் போது மீறியுள்ளார். இதனால் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார் இந்த பெண்மணி. அதன் பின்னர் மீண்டும் ஷாலினியை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். தல அஜித் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் இதில் தலையிட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பொருளாதார ரீதியாக உதவி செய்வதாகவும், மருத்துவமனையின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது என்றும் நடிகை ஷாலினி அந்தப் பெண்மணியிடம் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு உதவிகளுக்கு அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் நடிகை ஷாலினி அறிவுறுத்தி உள்ளார்.
இந்தப் பெண்மணி தொடர்பு கொள்வதற்கு முன்பே நடிகர் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, இந்தப் பெண்மணியை தொடர்புகொண்டு இந்தப் பெண்மணியின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கான பணத்தை பள்ளிகளில் நேரடியாக கட்டுவதற்காக குழந்தைகளின் விபரங்களை கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண்மணி குழந்தைகளின் கல்வி கட்டணத்தை என்னிடம் நேரடியாக பணமாக கொடுத்து விடுங்கள் என்று பதில் அளித்துள்ளார்.
இது பற்றி நடிகை ஷாலினி- இந்த பெண்மணி பேசிய தெலைபேசி ஆடியோ சமீபத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.