www.garudavega.com

‘நான் போறேன்’.. ஜீவா & கண்ணனை அடுத்து மூர்த்தியா..?.. உடையும் PANDIAN STORES குடும்பம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சகோதரர்கள் இடையேயுள்ள பந்தம் குறித்து கதை நகர்ந்து வருகிறது.

Will moorthy go Out Pandian Strores Serial Update

Image Credit : vijay television

Also Read | "நீங்க இல்லாம நான் இல்ல".. Fans-க்கு சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட 'பத்துதல' சிம்பு..!

இதன் ஒவ்வொரு எபிசோடிலும் ஏதாவது ஒரு விஷயம் விறுவிறுப்பாக சென்று கொண்டே இருப்பதால், மக்களும் இதனை ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வரும் சூழலில், சுமார் 1,100 எபிசோடுகளை கடந்தும் சென்று வருகிறது.

முன்னதாக மீனாவின் தங்கை திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் மூர்த்தி மற்றும் சகோதரர்களிடம் சண்டை போட்டுவிட்டு ஜீவா மற்றும் மீனா ஆகியோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருந்து விலகி இனிமேல் அங்கே வரமாட்டோம் என  வாழ்ந்து வருகின்றனர். 

Will moorthy go Out Pandian Strores Serial Update

Image Credit : vijay television

இதற்கெல்லாம் காரணமான கண்ணனை கதிரும் தனமும் விலாச, அதை ஏற்காத ஐஸ்வர்யா, அவமானம் தங்காமல் கண்ணனை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

அதாவது தனது கணவர் தவறு செய்ததாக அனைவரும் பழி போடுவதாக குறிப்பிடும் ஐஸ்வர்யா, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தனத்தை எதிர்த்து பேசுகிறார்.

Will moorthy go Out Pandian Strores Serial Update

Image Credit : vijay television

மற்றவர்களும் பதிலுக்கு பதில் பேச, கடைசியில் வீட்டை விட்டு கிளம்பவும் முடிவு செய்து ஐஸ்வர்யா வெளியேற அவரை தடுக்கவும் செய்கிறார் கணவர் கண்ணன்.  அப்போது "உனக்கு நான் வேண்டுமா? இல்லை இந்த குடும்பம் வேண்டுமா?" என கண்ணனிடம் ஐஸ்வர்யா கேட்க, என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் காதல் மனைவியையும், குடும்பத்தினரையும் பார்த்தபடி நின்ற கண்ணன் பிறகு மனைவி ஐஸ்வர்யாவுடன் சென்றுவிட்டார்.

Will moorthy go Out Pandian Strores Serial Update

Image Credit : vijay television

இதனால் கதிரிடம் ஃபீல் பண்ணி பேசும் மூர்த்தி நீயும் போய்விடு கதிர்.. நீ மட்டும் ஏன் அண்ணனுடன் இருக்கிறாய்? என சொல்ல, மூர்த்தியொ, ‘தப்புதான்.. மன்னிச்சுக்கப்பா.. இது உன் வீடு. நீ ஏன் போகணும். நாங்க வெளியே போறொம்’ என பேசுகிறார்.

Will moorthy go Out Pandian Strores Serial Update

Image Credit : vijay television

மூத்த அண்ணனான மூர்த்தி தன் சகோதரர்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பிய நிலையில், இப்படி, தன் கண் முன்னே குடும்பம் உடைவதை பார்த்து தாங்கிக்கொள்ளாமல் எமோஷனலாக பேசி வருகிறார்.

Also Read | 70 வயதில் பீமரதசாந்தி திருமண பூஜையில் குடும்பத்துடன் நடிகர் செந்தில்..! வைரல் புகைப்படங்கள்..

மற்ற செய்திகள்

Will moorthy go Out Pandian Strores Serial Update

People looking for online information on Pandian Strores, Pandian Strores episode today will find this news story useful.