அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் வைரமுத்துவை ஏன் பொன்னியின் செல்வன் இசை விழாக்களில் முக்கியத்துவம் கொடுத்து, அழைப்பிதழ் கொடுத்து அமரவைக்கவில்லை என்கிற கேள்விக்கு பிரஸ் மீட்டில் பதில் அளித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இயக்குநர் மணிரத்னம், “தமிழ் சினிமா பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. புதிய இயக்குநர்கள் வருகிறார்கள், போவார்கள். அப்படி நிறைய வளம்மிக்க துறை தமிழ். கலைஞர் வைரமுத்துவை தம் விழாக்களில் அருகில் அமரவைத்திருப்பார்கள்.
வைரமுத்து சார் கவிஞர், அவருடைய கவிதைகளை நிறைய படத்தில் ரஹ்மானுடன் சேர்ந்து நாங்கள் பாடலாக பண்ணியிருக்கிறோம். அவர் உண்மையில் ஃபெண்டாஸ்டிக். ஆனாலும் அதை தாண்டியும் நிறைய பேர் இருக்காங்க. தமிழ் மொழி வளமானது. இங்கு அதிகமாகவே இருக்கிறார்கள். புதிய திறமையாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படித்தான் இதுவும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.