www.garudavega.com

ஃபினாலேவுக்கு 2, 3 நாளே உள்ள நிலையில் BIGGBOSS வீட்டை விட்டு வெளியே போன பிரியங்கா! என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஃபினாலேவை நோக்கி வந்துவிட்டது.

why Priyanka went out what happened biggboss5 day 103 EP vijay tv

BiggBoss 103வது நாள் எபிசோடு

அதன்படி 103வது நாள் எபிசோடு ஒளிபரப்பாகி வந்தது. இதில் போட்டியாளர்கள் மற்றும் முன்னாள் போட்டியாளர்களுள் நாடியா, சுருதி, தாமரை, சிபி, அபினய், வருண், அக்‌ஷரா உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்த நிலையில் பிரியங்கா திடீரென்று காணாமல் போனதாக ரசிகர்கள் பலர் பதறினர்.

why Priyanka went out what happened biggboss5 day 103 EP vijay tv

தயாரான ராஜூ - பிரியங்கா

இதற்கான காரணம் எபிசோடில் தெரியவந்துள்ளது. அதன்படி 103வ நாள் எபிசோடின் சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நாயகர்கள் கலந்துகொள்வதற்காக வரவழைக்கப்பட்டனர். முன்னதாக இவர்களை வரவேற்று இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ராஜூ மற்றும் பிரியங்கா இருவரையும் பிக் பாஸ் நியமித்திருந்தார்.

why Priyanka went out what happened biggboss5 day 103 EP vijay tv

பிரியங்காவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

இதற்காக ராஜூ மற்றும் பிரியங்கா இருவருமே தயாராகிவிட்டனர். அப்போது பிரியங்கா திடீரென்று கால் வலி என்று பாத்ரூமில் சென்று அமர்ந்து கொண்டார். அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜூ என்ன ஏது என்று விசாரிக்கும் போது பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இதுதான் தனது கடைசி நாள் என்றும் தனக்கு கால் வலி இருப்பதாகவும் கூறுகிறார்.

Also Read: பாவனி - நிரூப் Kiss.. அமீர் ரியாக்‌ஷன தான் கவனிச்சோம்!.. அதே Scene-ல ராஜூ என்ன பண்ணிருக்கார் பாருங்க!

மேலும் இது எப்படி சரியாகும்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த வலி எப்படி இருக்கும் என்று ராஜூ வினவுகிறார். அப்போது பதில் சொன்ன பிரியங்கா கரைச்சலாக இருக்கும், ஸ்கேன் பண்ணி பார்த்தால் தான் தெரியும் என்று சொல்லி தன் வலியை கடத்துவதற்கு முயற்சிக்கிறார்.

கன்ஃபெஷன் அறைக்கு அழைத்த பிக்பாஸ்

இதனை தொடர்ந்து பிக்பாஸ் பிரியங்காவை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து, “உங்களை இப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்!” என்று குறிப்பிடுகிறார். அதன்படி பிரியங்கா மருத்துவமனைக்கு சென்று தனக்கு ஸ்கேன் செய்துவிட்டு தன் உடல்நிலை பற்றி அறிவிப்பார் என்று சொல்லிவிட்டு, சத்தமின்றி செல்கிறார்.

why Priyanka went out what happened biggboss5 day 103 EP vijay tv

ஃபினாலேவுக்கு 2, 3 நாளே உள்ள நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம்

பிரியங்காவின் இந்த திடீர் உடல்நிலை பிரச்சனை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதித் தருவாயில் நிகழ்வது பல ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது, எனினும் பிரியங்கா விரைவில் முழுமையாக நலம்பெற்று வரவேண்டும் என்று பல ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்திருக்கின்றனர்.

Also Read: உங்க ப்ளஸ்ஸே இதான்.. ஒரே போடாய் போட்ட Ex போட்டியாளர்! .. BiggBoss-ல் மீண்டும் தாமரை, அக்‌ஷரா, வருண்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Why Priyanka went out what happened biggboss5 day 103 EP vijay tv

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Priyanka, Vijay tv priyanka, VJ Priyanka will find this news story useful.