நேற்று நாமினேஷன் படலம் நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்தது போல ஆரி, அனிதா,சனம் ஆகியோர் இதில் இடம்பெற்றனர். இதேபோல சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் பாலாஜியும் இந்த பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து பிக்பாஸ் தான் ஒரு ராஜதந்திரி என்பதை நீண்ட நாட்கள் கழித்து நிரூபித்தார். அதன்படி டாப்பிள் கார்டு ஒன்று வழங்கப்படும் இதை யார் இவர்கள் 7 பேரில் இருந்து கைப்பற்றுகிறார்களோ அவர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்து வெளியேறுவர்.
#Nisha missed chance to escape from Nomination
Nisha has a audience support so she safe
Tricky #Anita used the chance and escape & in palce of her nominate to #Samyuktha#BiggBossTamil #பிக்பாஸ் #BiggBossTamil4 #VijayTelevision #Archana #Som #Gabriella #Aari #Rio #Balaji pic.twitter.com/cFc7yXpMIk
— R Ragavan (@Firstperson_01) November 23, 2020
மேலும் வேறு ஒருவரை அனைவர் முன்னிலும் நாமினேட் செய்யலாம் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து வட்டமேஜை மாநாடு தொடங்கியது. பிக்பாஸ் இதை அகம் டிவியிலும் லைவ்வாக ஒளிபரப்பினார். இதில் ஆரி, பாலாஜி, சோம், ரமேஷ் ஆகியோர் பாஸ் வேண்டாம் என மறுத்து விட்டனர். இதனால் அனிதா, சனம், நிஷா ஆகிய மூவருக்கு இடையில் போட்டி நிலவியது. இறுதியாக நிஷா பாஸை கைப்பற்றுவார் என எதிர்பார்த்தால் அதை அனிதாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டார்.
#BiggBossTamil#BiggBossTamil4#Anitha woww da..super👏👏👏#Nisha voda pulse terinju vache paaru aapu avalukku..
Super ma.. ithaye continue pannuma..
Final touch 'Vettaiyadave' song vera😂😂
— LivLaughLov (@moon5322) November 23, 2020
இதை ரொம்ப நேரம் இழுக்க வேணாம் இத்தோட முடிச்சுக்கலாம் என்பது போல நிஷாவை, அனிதா சீண்டி விட்டார். அந்த வலையில் நிஷா விழுக, அனிதா பாஸை கைப்பற்றி சம்யுக்தாவை நாமினேட் செய்து இந்த வாரம் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் கைக்கு கெடைச்ச பாஸை இப்படி அநியாயமா விட்டு கொடுத்துட்டீங்களே, மக்கள் உங்களுக்கு ஓட்டு போடலன்னா என்ன செய்வீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.