லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அனல் அரசு இந்த படத்துக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளனர்.
ஊர்வசி ரவுத்தலா, ராய் லக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, ‘மறைந்த நடிகர்’ விவேக், யோகிபாபு மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் பான் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் ஜூலை 28 அன்று மிகப்பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்வில் பேசிய லெஜண்ட் சரவணனிடம் ஏன் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை நீங்கள் இயக்கியிருக்க கூடாது.? என்று கேட்டதற்கு, “நான் இன்னும் அந்த அளவுக்கு வளரலங்க.. நான் நடிப்பில் மட்டுமே ஈடுபாட்டுடன் இணைந்தேன். நடிப்பே போதும் எனக்கு..
ஒரு நல்ல அருமையான கதை கிடைச்சுது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் எளிமையான கனெக்ட் ஆகுற கதை இது” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த திரைப்படம் மாஸ் கமர்சியல் ஆக்சன் திரைப்படம் என்று குறிப்பிட்டிருந்த லெஜண்ட் சரவணன், இந்த திரைப்படத்தை ஒரு 2,3 முறை பார்த்தால்தான் முழுமையாக பார்த்த திருப்தி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு இன்னொரு பிரஸ் மீட்டில், “இந்த முறை நான் அடிக்குற அடி மரண அடியா இருக்கும். அடிச்சா எதிரி எந்திரிக்கவே கூடாது” என்று டீசரில் வரும் தம்முடைய வசனத்தை பேசி அசரவைத்தார்.