பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 70 நாட்களை கடந்து விளையாண்டு கொண்டு வருகின்றனர்.
முதல் நாள் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். முதலாவதாக நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற, அடுத்தடுத்த வாரங்களில் நாடியா சாங், அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி வெளியேறினர். இவர்களுள் அபிஷேக் திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார்.
எனினும் பின்னர் 2வது முறையாக எலிமினேட் ஆனார். இதனிடையே கோரியோகிராஃபர் அமீர், நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து விளையாண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே கடைசியாக இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற வாரம் வெளியேறினார்.
இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் புரோசஸ்க்கு பிக்பாஸ், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் தானே நாமினேட் செய்தார். இந்த அறிவிப்பை கேட்டவுடனேயே அனைத்து போட்டியாளர்களும் வெடித்து சிரித்தனர். மேலும் பிக்பாஸை பார்த்து நெருப்புடா என்று கிண்டலாக சொன்னதுடன், இந்த டாஸ்க்கை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் குறிப்பிட்ட ஒரு தரவரிசை எண் கட்டங்களில் தப்க்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டட்து. 1 முதல் கிட்டத்தட்ட 11 வரை இருந்த இந்த தரவரிசையில் எந்த எண்ணில் வேண்டுமானாலும் ஒரு பிக்பாஸ் போட்டியாளர் நிற்கலாம். ஆனால் பிக்பாஸ் வீட்டில் தங்கள் இருப்புக்கான நியாயமான காரணத்தையும், பிக்பாஸ் வீட்டில் தாங்கள் செய்தவற்றுக்காக கற்பிதங்களையும், அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்று கொள்ளும்படியான மனநிலையில் முன்வைக்க முடியும்.
இதேபோல் சக போட்டியாளர் ஒருவர், பிற போட்டியாளரை சென்று அவர் ஒரு குறிப்பிட்ட தர வரிசை எண்ணில் இருப்பதற்கான தகுதி இருப்பவரா இல்லையா என்பதை நேரடியாக விமர்சித்து, முடிந்தால் அந்த நபரை குறிப்பிட்ட அந்த எண்ணிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு தாங்கள் அந்த குறிப்பிட்ட எண் வரிசைக்கு வரமுடியும்.
இந்தநிலையில் 1-ஆம் வரிசை எண்ணில் சிபி அமர்ந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில், தான் இருப்பதற்கான காரணங்களை சிபி கூறிக்கொண்டு இருந்தார். அவரிடம் நிரூப் மற்றும் ராஜூ இருவரும் வாதங்கள் செய்து கொண்டிருந்தனர். இதேபோல் அக்ஷராவும் வாதம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமீர் நேரடியாக களத்தில் இறங்கி சிபி உடன் வாதம் செய்யத் தொடங்கினார்.
அமீர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமானார். அவர் உள்ளே வந்த பிறகு மற்றவர்களைப் பற்றிய தம்முடைய பார்வையை முன்வைத்தார். அமீரை தொடர்ந்து சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்தார். இந்த நிலையில் அமீர் சிபியை விமர்சித்துக் கொண்டிருந்தபோது சிபி அவரை பார்த்து, “நீ பாவனிட்ட பேசுவதுபோல் என்னிடம் பேச கூடாது.. 50 நாளுக்கு அப்புறம் தான் வந்த!” என்று சொன்னதும் உடனே அமீருக்கு கோபம் வந்தது.
உடனே, “இந்த விஷயத்தில் எதற்கு பாவனியை இழுக்கிறாய்?” என்று பேசத் தொடங்கினார். பின்னர் சஞ்சீவ் இந்த விஷயத்தில் தலையிட்டு சிபியிடம், “நீ அங்கு உட்கார்ந்து இருப்பது ஒன்றும் உன்னுடைய திறமை அல்ல. அப்படி உட்கார்ந்திருப்பதால் அடுத்தவர்களை தரக்குறைவாக பேச வேண்டும் என்றும் அவசியமில்லை.
நீ ஏன் அங்கு உட்கார தகுதி இல்லை என்கிற நியாயமான காரணத்தை மற்றவர்கள் முன் வைப்பார்கள். நீயும் அப்படி அங்கு உட்கார்ந்து இருப்பதற்கான காரணத்தை முன் வைத்தால் போதுமானது. தேவையில்லாமல் இந்த விஷயத்தில் பாவனியை பற்றி குறிப்பிட்டதற்காக நீ மன்னிப்பு கேட்க வேண்டும்!” என்று வலியுறுத்தினார்.
ஆனால் சிபி, “முடியாது. நான் மன்னிப்பு கேட்க முடியாது, நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் கூட பேசிய ஒவ்வொன்றுக்கும் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க முடியாது!” என்று பேசினார். இறுதியில் முதலாம் எண் வரிசையில் நின்ற சிபி இந்த வாரம் எவிஷன் ப்ரோசஸில் நாமினே செய்யப்பட் முடியாது என்று பிக்பாஸ் அறிவித்தார்.