முதல் வாரம் வண்ணமயமாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு தற்போது அதன் ஒரிஜினல் மோடுக்கு வந்துள்ளது. ரேகா வெளியேறியதை அடுத்து 2-வது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் ஆரி, அனிதா சம்பத், ஆஜித், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ஆகிய ஐந்து பேர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஹார்ட் டாஸ்க், மாஸ்க் டாஸ்க் சர்ச்சையை தொடர்ந்து நேற்று உண்மையை சொல்ல வேண்டும் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் கொளுத்தி போட்டார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது மனதில் உள்ள எண்ணங்களை சொல்ல பெரிய பிரளயமே வெடித்தது. குறிப்பாக பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி போல நன்றாக விளையாடினார்.
Now I understand why #BalajiMurugaDoss and #Gabi are in #SureshChakravarthi 's team...they are experts in
Kolutthipodu-fying...😁#BiggBossTamil4
— Occasional Human (@Casualguy17) October 19, 2020
இதேபோல கேப்ரியலாவும் உண்மையை சொல்லுகிறேன் என சர்ச்சைக்கு திரி கொளுத்தி போட்டார். இதனால் நேற்று பிக்பாஸ் வீடே போர்க்களமாக மாறியது. இந்த சண்டைகளை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி, கேப்ரியலா இருவரும் சுரேஷ் சக்கவர்த்தி டீமில் இருக்கும் காரணம் எங்களுக்கு தெரிந்து விட்டது. உண்மையை சொல்லுகிறேன் என நீங்கள் இருவரும் நன்றாக கொளுத்தி போடுகிறீர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.