கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதன் காரணமாக 50 சதவீதம் அனுமதியோடு இயங்கிய திரையரங்குகள் மீண்டும் அறிவிப்பு வெளியாகும் வரை முழுமையாக மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
திரையரங்குகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்களிடம் ஓடிடி தளம் நல்ல வரவேற்பை பெற்றாலும் கூட திரையரங்குகளில் கிடைக்கும் அனுபவத்தையே பெரும்பான்மையான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்திருக்கக்கூடி இன்றைய சூழலில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பிறகு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 12/07/2021 வரை திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை என அரசு தரப்பில் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி வரும் 12ஆம் தேதிக்கு மேல் திரையரங்குகள் திறக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.