மறைந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.” என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
— Rajinikanth (@rajinikanth) April 30, 2021
இதனிடையே முன்னதாக காப்பான் பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், “சிவாஜி படத்தில் சஹானா பாடலை ஒளிப்பதிவு செய்தது கடினமான ஒன்று. அதை அவர் எப்படி ஒளிப்பதிவு செய்கிறார் என பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்.
@anavenkat 🙏💔💔
Rest in peace sir #KVAnand #KVAnandh #KVAANAND #ayan #sivaji #rajinikanth #superstarrajinikanth #Kaappaan #suriya #Annaatthe #rajni #rajini #Rajnikanth #RIPKVAnand #RIPKVAnandh #Kollywood pic.twitter.com/75X1qs9uKs
— Aravind (@AravindMaveric) April 30, 2021
நானும் அவரும் ஒரு படம் பண்ண முயற்சித்தோம். ஆனால் அது முடியாமல் போனது. நான் அதை மிஸ் பண்ணிவிட்டேன்” என வருந்திய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
இதேபோல் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் கே.வி.ஆனந்த் மறைவுபற்றி குறிப்பிடும் போது, “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர்.
பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2021
அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.” என தெரிவித்துள்ளார்.