பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சென்னையில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடி பெர்ஃபார்ம் பண்ணியிருந்தார்கள்.
ஆனால் இந்த நிகழ்வில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு தோன்றாதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேச்சுகள் சலசலக்கத் தொடங்கியது, இந்நிலையில் இது தொடர்பாக தெருக்குரல் அறிவு பதிவிட, அதற்கு சந்தோஷ் நாராயணன் விளக்கமும் அளித்தார்.
Also Read | ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் .. வைரலாகும் ‘தெருக்குரல்’ அறிவு & சந்தோஷ் நாராயணனின் பதிவுகள்.!
அதன்பின், தற்போது பாடகி ‘தீ’ சமூக வலைதளபக்கத்தில் ஒரு விளக்க பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், “எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு & சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்குரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் கிடைத்த வாய்ப்புகளில் இருவர் பற்றியும், குறிப்பாக அறிவு குறித்து பெருமையாவே பேசியிருக்கிறேன். எங்கேயுமே இருவரின் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை.
அதே சமயம் எங்கள் பணி குறித்த பிறரது விளம்பரங்களுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இயக்குனர் மணிகண்டனும், அவருடைய `கடைசி விவசாயி' திரைப்படமும் தான் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம். நாங்கள் அனைவரும் விவாதித்துதான் 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் வரிகளையும் பாட்டையும் உருவாக்கினோம்.
இந்த பாடல் என்னைப்பொருத்தவரை பழங்கால தமிழ்ச்சமூகம் பஞ்சபூதங்களான இயற்கையை வழிபாடு செய்த மரபை என்ஜாய் எஞ்சாமி பாடலில் கூறப்பட்டிருக்கிறது. வள்ளியம்மை பாட்டியின் இருப்பு வீடியோவில் வந்துபோவது என்பது நாமெல்லாம் தாய் வழிச் சமூகம் என்பதை குறிப்பதற்காக.. எனினும் இந்த பாடலுக்கான மென்மேலும் பொருளை பாடல் வெளியான பின்பே, அறிவின் ஒவ்வொரு நேர்காணல் மூலமாக நான் அறிந்தேன். அறிவு சொன்னது முக்கியமானது, முதன்மையானது என நம்பி, அவரது குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க விரும்பினேன். பாடலில் கிடைத்த வருமானம் மற்றும் உரிமைகள் மூவருக்கும் (அறிவு, தீ, சந்தோஷ் நாராயணன்) சமமாகப் பகிரப்பட்டன.
'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் அடைந்த வெற்றியின் உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசை. அதற்கு ஒரு வாய்ப்பு சமமாக இல்லாமல் இருந்தாலும் நிச்சயம் நான் அதில் இருக்கமாட்டேன். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் நானும் அறிவும் பங்கேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். ஆனால் அமெரிக்காவில் இருந்ததால் அறிவு பங்கேற்க முடியவில்லை. அதனால் அவர் குரலை பயன்படுத்தி நிகழ்வு நடந்தது.
அவரது குரலுக்காகவும், அவரின் பாடல் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலுக்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா என ஒட்டுமொத்த குழுவுக்கும் அடி மனதில் இருந்து நன்றி. பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் அன்பு மற்றும் மரியாதை கொண்ட சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை என்றும் வெல்லும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
Please read it fully when you get the time 🙏🏽💕 pic.twitter.com/RkcccT3wps
— Dhee (@talktodhee) August 1, 2022
Also Read | Ponniyin Selvan: 'பொன்னி நதி' Song மொழி ஏன் Colloquial-ஆ இருக்கு? - பாடலாசிரியர் Exclusive