Naane Varuven M Logo Top
www.garudavega.com

VTK வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் கொடுத்த சொகுசு கார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு பட வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவிற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார்.

VTK producer gifts Silambarasan TR car worth over Rs 90 lakh

வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் 350 பைக்கை பரிசளித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிம்புவிற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார். இதன் விலை 90 லட்ச ரூபாய் ஆகும். ஹைப்ரிட் காரான இதில் எரிபொருள் எஞ்சின் மட்டும் அல்லாது மோட்டார் மூலமாகவும் கார் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட இந்த எம்பிவி கார் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் லாஞ்ச் செய்யப்பட்டது. இந்த கார் 4935mm நீளமும், 1850mm அகலம் மற்றும் 3000mm வீல்பேஸ்-ம் கொண்டது.

இந்த Toyota VellFire காரில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 141 பிஎச்பி மற்றும் 198 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் பவர் சைடு கதவுகள் மற்றும் 17-ஸ்பீக்கர் மியுசிக் சிஸ்டம், லெதர் கேபின் என பட்டாசாக இருக்கிறது இந்த கார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VTK producer gifts Silambarasan TR car worth over Rs 90 lakh

People looking for online information on Car, Silambarasan TR, Vendhu Thaninthadhu Kaadu, VTK will find this news story useful.