விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் ஐ.பி.எஸ் போட்டிகளின் இறுதி ஆட்டமும் மோதப் போகிறதா என்ன..?!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் பட பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் அடித்துவிட்டன. மேலும் படமும் சம்மருக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போனது.
இதனிடையே லாக்டவுன் சூழ்நிலை கொஞ்சம் சரியான பின்னர் தியேட்டர்கள் திறப்பது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து திரையரங்கங்களுக்கு பெரிய கூட்டத்தை இப்போது வர வைக்க, பெரிய ஹீரோக்களின் படங்களால் மட்டுமே முடியும். அதில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் குறிப்பிடத்தக்க ஒன்று என தெரிவித்து வருகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனது படங்களை தீபாவளி பண்டிகையின் போது ரிலீஸ் செய்து சூப்பர் ஹிட் கொடுப்பது விஜய்யின் பாணி. இதனால் படக்குழுவினர் தீபாவளியை (நவம்பர்-14) டார்கெட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் வந்திருக்கும் இன்னொரு முக்கியமான தகவல்தான் ஐ.பி.எல் போட்டிகள். பொதுவாக சம்மரில் நடக்கும் ஐ.பி.எஸ் போட்டிகளும் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதால், செப்டம்பர் மாத இறுதியிலிருந்து போட்டிகளை தொடங்கலாம் என கிரிக்கெட் வாரியம் பேசி வருகிறது.
இதையடுத்து செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் ஐ.பி.எல் போட்டியின் ஃபைனல் நவம்பர் 14 அன்றே வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், விஜய்யின் மாஸ்டரும் ஐ.பி.எஸ் ஃபைனலும் டபுள் ட்ரீட்டாக வரப்போகிறது என்பதை உறுதியாக கூறலாம். அதிலும் நம்ம தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்குள் வந்தால், கண்டிப்பாக தல-தளபதி என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். இதே எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்போம்., இந்த Epic Face-Off சாத்தியமாகிறதா என்று.!!