பிரபல விஜேவாக கோலிவுட்டில் பிரபலமான விஜே ரம்யா, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய முன்னணி தொகுப்பாளினி, குரல் கலைஞர், நடிகை என பன்முகம் கொண்டவர். அமலா பால் நடித்த ‘ஆடை’, சமுத்திரகனி நடித்த ‘சங்கத்தலைவன்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Also Read | VIDEO: "நான் இயக்கிய இந்த படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்".. காரணத்தோடு விளக்கிய H. வினோத்!
அண்மையில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை நிகழ்வை பிக்பாஸ் ராஜூவுடன் இணைந்து விஜே ரம்யா தொகுத்து வழங்கியிருந்தார். அப்போது, “சின்னத்தம்பி படத்துக்கு கேர்ள் ஃப்ரண்டுடன் சென்றேன்” என விஜய் கூறி முடித்ததும், அந்த கேர்ள் ஃப்ரண்டு யாரு என விஜய்யிடம் கேட்க, அவரும் விளையாட்டாக, “நீ கொஞ்சம் வெளிய இருமா” என கலகலப்பாக கூறி இருந்தார்.
இனை தொடர்ந்து விஜே ரம்யா, தான் எழுதிய, “Stop Weighting: A Guidebook to a Fitter, Healthier You” என்கிற புத்தகத்தை தளபதி விஜய் கையில் கொடுத்து வாழ்த்து பெற்ற ஃபோட்டோவை பகிர்ந்தார். இந்த ஃபோட்டோ ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடிகை மற்றும் இயக்குநர் சுஹாசினி, நடிகர் கார்த்தி மற்றும் பலர் சூழ நடந்தது.
இதில் பேசிய நடிகை மற்றும் விஜே ரம்யா, “என் அப்பா, அம்மாவுக்கு கூட இது தெரியாது. எனது 17 வயதில் வெளிநாட்டில் ஒரு நீச்சல் குளத்தில் மூழ்கிப் போனேன். அப்போது வாழ்க்கையே முடிந்துவிட்டது ,அவ்ளோதான் என நினைத்தேன். அப்போது என்னை மீட்டு, ‘ஆர் யு ஓகே’ என கேட்டவர் சுஹாசினி மேடம். என் ஆரம்ப காலத்தின் பல நினைவுகளில் அவர் இருக்கிறார். அவர் எனது இன்னொரு அம்மா. 19 வயதில் மும்பையில் ஒரு விளம்பர ஷூட்க்காக போயிருந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறிய ஹோட்டலில் ரூம் போட்டிருந்தார்கள். ஆனால் அப்போது என்னை அழைத்து ஒன்றாக பயணித்து மும்பை போகலாம் என சொல்லி, தன்னுடன் 7 ஸ்டார் ஹோட்டலில் என்னை தங்கவைத்து பார்த்துக்கொண்டார்கள். இந்த புத்தகத்துக்கு கண்வலி இருந்த போதும், முழுமையாக படித்து அணிந்துரை எழுதினார்.
இந்த விழாவுக்கு வர முடியுமா என வேண்டுகோள் விடுத்தபோது, உரிமையோடு தம்மை அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார்.” என உருக்கமாக பேசினார்.
Also Read | "வதந்திகளை நம்பாதீர்கள்".. விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கை..