www.garudavega.com
iTechUS

தான் எழுதிய புத்தகத்துடன் தளபதி விஜய் -யை சந்தித்த நடிகை VJ ரம்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வம்சி பையிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்துடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ள விஜே ரம்யா, பொங்கல் சிறப்பு படமாக இந்தனை தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

VJ Ramya met Varisu Vijay with her Stop Weighting Book

பிரபல விஜேவாக கோலிவுட்டில் பிரபலமான விஜே ரம்யா, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய முன்னணி தொகுப்பாளினி, குரல் கலைஞர், நடிகை என பன்முகம் கொண்டவர். அமலா பால் நடித்த ‘ஆடை’, சமுத்திரகனி நடித்த ‘சங்கத்தலைவன்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வை பிக்பாஸ் ராஜூவுடன் இணைந்து விஜே ரம்யா தொகுத்து வழங்கியிருந்தார். அப்போது, “சின்னத்தம்பி படத்துக்கு கேர்ள் ஃப்ரண்டுடன் சென்றேன்” என விஜய் கூறி முடித்ததும், அந்த கேர்ள் ஃப்ரண்டு யாரு என விஜய்யிடம் கேட்க, அவரும் விளையாட்டாக, “நீ கொஞ்சம் வெளிய இருமா” என கலகலப்பாக கூறி இருந்தார்.

இந்நிலையில் தான் விஜே ரம்யா, தான் எழுதிய, “Stop Weighting: A Guidebook to a Fitter, Healthier You” என்கிற புத்தகத்தை தளபதி விஜய் கையில் கொடுத்து வாழ்த்து பெற்ற ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Ramya met Varisu Vijay with her Stop Weighting Book

People looking for online information on Varisu, Vijay, VJ Ramya will find this news story useful.